கொரோனா எதிர்ப்பு சக்தி 50 நாட்களில் மறைந்துவிடும்?

பொதுவாக மனிதனின் உடலில் எந்த நோய் தாக்கினாலும் அதற்கு எதிர்ப்பு சக்தி உருவாகி விடும்.

தற்போது பரவிவரும் கொரோனா நோய்க்கு எதிராகவும் எதிர்ப்பு சக்திகள் மனித உடலில் உருவாகி வருகின்றன. இதை ஆன்டிபயாடிக் என்று அழைப்பார்கள்.

இவ்வாறு உருவாகும் ஆன்டிபயாடிக் சிலருக்கு ஆயுள் முழுவதும் நீடிக்கும். சிலருக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மறைந்து விடும். ஆனால் கொரோனா நோய்க்கு எதிராக உருவாகியுள்ள ஆன்டிபயாடிக் 50 நாட்களிலேயே மறைந்து விடுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ஜே.ஜே. ஆஸ்பத்திரி இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. மொத்தம் 3 ஆஸ்பத்திரியை சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் 801 பேரை தேர்வு செய்து அவளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்களில் 28 பேருக்கு ஏற்கனவே உருவாகியிருந்த ஆன்டிபயாடிக் முற்றிலும் காணாமல் போய் இருந்தது. இவர்களில் பெரும்பாலானோருக்கு நோய் தாக்கிய காலத்தில் 90 சதவீதம் வரை ஆன்டிபயாடிக் உருவாகியிருந்தது.

தற்போது ஆய்வு செய்ததில் அவர்களில் பலருக்கு 50 சதவீதத்திற்கும் குறைவாகவே ஆன்டிபயாடிக் இருக்கிறது. தொடர்ந்து அது குறைந்து வருகிறது.

இந்த ஆய்வின்படி பார்த்தால் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபயாடிக் 50 நாட்களில் மறைந்துவிடும் என்று தெரியவந்துள்ளது. சிலருக்கு மேலும் சில மாதங்கள் நீடிக்கலாம். ஆன்டிபயாடிக் நீடித்தால் தான் மீண்டும் கொரோனா நோய் தாக்காது. ஆனால், ஆன்டிபயாடிக் காணாமல் போவதால் கொரோனா மீண்டும் தாக்கும் அபாயம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *