சவுதியில் இருந்து இலங்கை செல்ல பெரும் தொகை பணம் அறவீடு?

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தமாக வருகை தந்துள்ள லட்சக்கணக்கான பணியாளர்கள் தமது தாயகம் நோக்கி பயணம் செய்யும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.கொரோனா நோய் தொற்று காரணமாக அதிகமான பணியாளர்கள் தமது வேலை வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல் மாதச் சம்பளம் இன்றியும், தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணமில்லாத சூழ்நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு பெருவாரியான பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதனைத் தட்டிக் கேட்பதற்கும் இவர்கள் சார்பாக ஒரு முறைப்பாட்டை அரசாங்கத்திற்கு எடுத்து வைக்கவும் முடியாத சூழ்நிலையிலேயே இவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்இச்சந்தர்ப்பத்தில் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இலங்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு உத்தேசித்துள்ள பணியாளர்கள் 4450SAR (சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் கட்டணம் தவிர்த்து) சிறீ லங்கன் எயார் லைன்ஸுக்கு செலுத்துமாறு வேண்டியுள்ளது. செலுத்தும் தொகையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.01. ஒருவழிப் பயண விமான டிக்கெட்02. 3 ஸ்டார் ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்03. PCR(2) பரிசோதனை04. விமான நிலையத்திலிருந்து தங்குமிட ஹோட்டல் வரை போக்குவரத்து வசதி
மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்த வெளிநாட்டு பணியாளர்களால் இத்தொகையை செலுத்த முடியுமா என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மீண்டும் இவர்கள் தமது நாட்டை நோக்கி பயணிக்க அரசாங்கம் சலுகைகளையும் உதவிகளையும் செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *