அம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணிகளின் போது பாரிய பண மோசடி!

அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனம் ஒன்றின் பண மோசடி வழக்கு விசாரணையில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஆஸ்பென் மருத்துவ நிறுவனத்துடனான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் குறித்த நிறுவனம் பணமோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் $18.8 மில்லியன் திட்டத்திற்கு குறித்த நிறுவனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளிடம் வினவியபோது, ​​வைத்தியசாலையின் சார்பில் மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

எனினும், துணை ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் Aspen இன் முதல் 2.1 மில்லியன் டொலர் பரிவர்த்தனையானது பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான Saber Vision Holdingsக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல் இலங்கை காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நிமல் பெரேராவிடம் வினவியபோது, ​​இத்தாலிய வர்த்தகர் ஒருவரினால் பணம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இத்தாலிய தொழிலதிபரின் முகவரி அல்லது தொலைபேசி எண்கள் மூலம் அடையாளத்தை சரிபார்க்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saber Vision Holdings குறித்து வினவியபோது, ​​அந்த நிறுவனம் குறித்து தனக்கு தெரியாது எனவும், அந்த நிறுவனம் தனது இத்தாலிய நண்பருக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனவும் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நிறுவனம் நிமல் பெரேராவிற்கு சொந்தமானது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

முழுமையான செய்தியை படிக்க…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *