உலகம் பேரழிவுகளின் அவலத்தில் !!!

கொரோனா எனும் நோய்க் கிருமியின் பாதிப்பிலிருந்து உலகம் ஓரளவு மீண்டு வரும் நிலையில் தற்போது புதிய நெருக்கடியொன்றை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவை விட ஆபாத்தானது பசி,பட்டினியாகும்.உலக நாடுகள் பலவற்றில் பசியால் வாடுகின்ற/இறக்கின்ற மக்களின் தொகைகளே அதிகமாக காணப்படுகிறது.குறிப்பாக ஆபிரிக்க நாடுகள் பசியால் அன்றாடம் பல நூற்றுக் கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருக்கிறது.
ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய ஆணையம் அண்மைக்கால எதிர்வு கூறல் மற்றும் எச்சரிக்கை அறிக்கையாக உலக நாடுகளிற்கு கூறிய செய்தி உணவு நெருக்கடியை நோக்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.விவசாய உணவுகளை அழிப்பதற்கான ஒரு வகை உயிரினம் பெருகிக் கொண்டிருக்கிறது.அதற்கான முன்னேற்பாடுகளை உலக நாடுகள் செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்மைக் காலங்களாக ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் விவசாய உற்பத்திகளை தாக்கிய வெட்டுக் கிளிகள் தற்போது நான்கு கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.ஒரு சதுர கிலோ மீட்டர் அளவில் உள்ள இந்த வெட்டுக்கிளிகள் கிட்டதட்ட 35,000 மனிதனின் விவசாய உணவை அழித்துவிட கூடிய சக்தி வாய்ந்தவைகளாக காணப்படுகிறது.
ஈரான்,பாகிஸ்தானை உலுக்கிய இந்த வெட்டுக்கிளி படை தற்போது எமது அயல் நாடான இந்தியாவை வந்தடைந்துள்ளது.இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் குடியிருப்பு பகுதிகளில் கோடி கணக்கில் ஊடுருவி, அங்குள்ள மரங்களை அழித்து சென்றுள்ளது.இவ் வெட்டுக்கிளி படை மேலும் பல மாவட்டங்களில் பரவி அங்கு விவசாயங்களை அழித்துக் கொண்டிருக்கிறது.
கடந்து 10 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை இவை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து எச்சரித்து வந்த
ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய ஆணையத்தின் அறிக்கையினை கவனத்திற் கொள்ளாத இந்தியா பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும், மரங்களையும் இழக்க நேரிடும் என கணிக்கப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட இந்த அதீத இழப்பால் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.ஒரு சதுர Km ல் நான்கு கோடி எண்ணிக்கையில் இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகள் 1000சதுர km  அளவில்,நாள் ஒன்றுக்கு 150கி.மீ வரை பறக்கக்கூடியது எனவே இது உலக விவாசயத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தி, உணவு நெருக்கடியை தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *