கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உடலில் நான்கு வகையான வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உடலில் 4 வகையான வைரஸ் தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸின் முழுமையான மரபணு வரிசைப்படுத்தலின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் பெற்றுக் கொளள்ப்பட்ட இரத்த மாதிரியில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வைரஸ்களின் முழு மரபணு வரிசைமுறை இலங்கையில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கொரோனா வைரஸின் பல வகைகள் உலகம் முழுவதும் பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், அவற்றில் சில மற்றவைகளை விட அதிக வைரஸ்களை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *