இலங்கையில் இலவச இணைய டேட்டா தரவு வழங்கப்படுவதாக கூறப்படும் மோசடி குறித்து எச்சரிக்கை

இலங்கையில் சமூக ஊடக பயனாளர்களுக்கு இலவச இணைய டேட்டா தரவு வழங்கப்படுவதாக கூறப்படும் மோசடி குறித்து இலங்கையின் இணைய பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது,

இதனால் தனிப்பட்ட தகவல்கள் – இரகசிய பாஸ்வேர்ட்களை இழக்க நேரிடலாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இலவச டேட்டா வழங்கப்படலாமென வரும் அநாமதேய எஸ் எம் எஸ்கள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

“எந்தவொரு விளம்பரதிலும் உங்களை பதிவு செய்வதற்கு முன்பு அது உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த அந்த நிறுவனத்தின் இணைய வலைத்தளத்தைப் பாருங்கள்” என இலங்கையின் இணைய பாதுகாப்பு அதிகாரசபை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *