யாழ்ப்பாணத்தில் விரைவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக்கூடிய சாத்தியக் கூறுகள்

யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்றவாறே தொடர்ந்தும் நிலமை காணப்படுமானால் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 7 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் முதலாவதாக இனங்காணப்பட்ட தாவடியை சேர்ந்த நோயாளி தற்போது நலமடைந்துவரும் நிலையில் அவர் மிக விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் மிகுதி நோயாளிகளும் அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதுடன் மேலும் கடந்த சில நாட்களாக எமது மாவட்டத்தில் எந்த ஒரு கொரோனா நோயாளிகளும் இனம் காணப்படவில்லை என்றும் இது நமக்கு ஒரு ஆரோக்கியமான விடயம் எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை போல இன்னும் சில தினங்களுக்கு இருக்குமாயின் மத்திய சுகாதார அமைச்சும் இலங்கை அரசாங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் சங்கானை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10 பேருக்குமே இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த ஒரு நோயாளிகளும் இனம் காணப்படவில்லை என்பதுடன் கடந்த சில நாட்களாக தொற்று உள்ளவர்கள் எவரும் இனம் கானப்படவில்லை.

தற்போது இருக்கின்ற நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடருமானால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த ஒரு வாரமாக யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒருவரும் அடையாளப் படுத்தப் படவில்லை எனினும், இன்றும் வைத்தியசாலையிலும் வைத்தியசாலைக்கு வெளியே உள்ளவர்களிடமும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *