உடல்நிலை சரியில்லாத கணவனை பார்க்க மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நடந்து சென்ற மனைவி

உடல்நிலை சரியில்லாத கணவனை கவனித்துக்கொள்வதற்காக வயதான பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் மலேசிய அரசாங்கம் நாடு தழுவிய முடக்கத்தை ஏப்ரல் 14 வரை நீட்டித்துள்ளது. இதனால் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மலேசியாவை சேர்ந்த ஹெர்மன் சுடில் என்பவர் தனது 66 வயதான தாய், உடல்நிலை சரியில்லாத கணவனை பார்க்க நடந்தே சென்ற உருக்கமான சம்பவத்தை தனது பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

ஹெர்மன் சுடில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மலேசியாவின் ஜோகூர் பஹ்ரு பகுதியில் வசித்து வந்தார். சமீபத்தில் அவருடைய மனைவிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக தாயை வரவழைத்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் கொரோனா தீவிரமடைந்ததால் நாடு தழுவிய முடக்கத்திற்கு மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ஹெர்மனின் தாயார் சிங்கப்பூரில் இருக்கும் தனது 80 வயதான கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரைக் காணவில்லை என்றும் கேள்விப்பட்டதும், அவரைப் பராமரிப்பதற்காக நாடு திரும்ப முடிவு செய்தார்.

போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாததால், ஜோகூர் பஹ்ரு பகுதியில் இருந்து கால் மற்றும் முழங்கால் பிரச்சினைகள் உள்ள ஹெர்மனின் தாயார் 20 வயது மருமகளின் உதவியுடன் நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சாமான்களை எடுத்துச் செல்வதற்கும், ஹெர்மனை ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு வீடியோ அழைப்பு மூலம் தனது தாயின் நிலை குறித்து புதுப்பிப்பதற்கும் அந்த மருமகள் உதவியாக இருந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணிக்கு ஜே.பி. சுங்கத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் இரவு 9:30 மணிக்கு சிங்கப்பூரில் பூன் லேவை அடைந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, இரண்டு குடிவரவு மற்றும் சோதனைச் சாவடியில் பணிபுரிந்து ஊழியர்கள், சிங்கப்பூர் சுங்கச்சாவடிக்கு வந்தபின் அவரது தாயை சக்கர நாற்காலியில் குடிவரவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அவர் வீட்டிற்கு சென்றடைந்ததும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *