பாராளுமன்றத்தை கலைத்தாலும் ஜனாதிபதிக்கு அரசாங்கப் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்

துணை மதிப்பீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் பாராளுமன்றத்தை கலைத்த பிறகு அந்த பணத்தை பெற்றுக்கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“தற்போது இந்த முறையில் பாராளுமன்றத்தை கொண்டு செல்ல இயலாது. இப்போது பாராளுமன்றத்தின் காலம் முடிந்தது., நேற்று இறுதிநாள். அதனால் மார்ச் மாதம் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை கலைக்க
பின்னர் விசேடமாக நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத பணம், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது, ”என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்ரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும், தனது அறிவையும் அனுபவத்தையும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்க அரசியலில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இப்போது தனது அறிவை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கத் தொடங்கியுள்ளார் என்று தெரிகிறது.