புதுடில்லியில் மோடியை நேரில் சந்திக்க நேர ஒதுக்கீட்டைக் கோருகிறார் கோட்டா!

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் தேசிய கட்சிகள் ஊகங்களை வெளியிட்டுவரும் நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இந்தியாவின் தலைநகரான புதுடில்லிக்கு விஜயம் செய்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் உட்பட பல முக்கியஸ்தர்களைச் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டையும் அவர் கோரியுள்ளதோடு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இப்பயணம் இடம்பெறவுள்ளது எனவும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

பிரதான தரப்புக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்குரிய தயார்ப்படுத்தல்களில் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்படுவதற்கு அதிகளவான வாய்ப்புக்கள் இருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *