2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை ஆரம்பம்! 12 இல் வாக்கெடுப்பு

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நாளை ( 06) ஆரம்பமாகின்றது.

வரவு – செலவுத் திட்ட உரை இன்று முடிவடைந்த பிறகு நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
இதன்படி பட்ஜட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், நாளை ஆரம்பமாகும். 12ஆம் திகதி வரை நடக்கும் விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
 
வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான விவாதம், மார்ச் 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 5ஆம் திகதி முடிவடையும். அன்றைய நாள் இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும்.
…………..
பட்ஜட் முன்மொழிவுகள் சில
புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும். இதன்படி சிகரட் ஒன்றின் விலை 5 ரூபாவால் உயர்வடையும்.

கசினோ கட்டணமும் அதிகரிக்கும்.கடவுச்சீட்டை ஒரே நாளில் பெறக்கூடிய சேவைக்கட்டணமும் அதிகரிக்கின்றது.

‘ தேர்தலை இலக்கு வைத்த பட்ஜட் அல்ல…
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு..

” இது தேர்தலை இலக்காகக்கொண்ட ‘பட்ஜட்’ அல்ல. நாய்க்குகூட நல்லதையே செய்ய விரும்புகின்றோம்.” – என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

” நல்லாட்சியின்கீழ் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு சிற்றூழியர் முதல் அமைச்சுகளின் செயலாளர்கள்வரை அனைவரினதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இம்முறையும் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 40 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. இதன்படி 2ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இராணுவத்தினரை வைத்து பிழைப்பு நடத்தும் மஹிந்த அணியையும் பார்க்க, படையினருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமக்கான சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கு ‘கனவு மாளிகை’க் ( சீன மாளிகா) கடன் திட்டம் அறிமுகம்.

புதுமணத் தம்பதிகளுக்கு, 6 வீத வட்டியுடன் வீடமைப்புக் கடன் திட்டம். 35 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.

வடக்கில் செங்கல் வீடுகளை அமைக்க மேலதிக நிதி ஒதுக்கடு.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி முடிவதற்குள் வடக்குக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

‘ மஹிந்த ஆட்சியின்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை. இது வெட்கக்கேடான விடயமாகும்.

மொனறாகலை மாவட்டத்தில் மாத்திரம் 35 ஆயிரம் பேருக்கு மலசலக்கூட வசதி இல்லை. எனவே, இவ்வருடத்தில் இப்பிரச்சினைக்கு முடிவு காணப்படும். கழிவறைகள் அமைப்பதற்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

அதேபோல், ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் நவீன வசதிகளுடன் மலசலக்கூடங்கள் அமைக்கப்படும். பராமரிப்பு பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.” நிதி அமைச்சர் மங்கள்.

ஊரெழுச்சி வேலைத்திட்டத்தின் ஊடாக ( கம்பெரலிய) ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 30 கோடி ஒதுக்கீடு.

” அரசியல் சூழ்ச்சிமூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டவேளை, கம்பெரலிய திட்டம் இரத்து செய்யப்பட்டது. மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு அத்திட்டத்தை அமுல்படுத்தினோம்.” – நிதி அமைச்சர் மங்கள சமரவீர.

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *