“அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறப்பு”

இவ்வளவு காலமும் ஹனீபா மதனி தன்னால் இயன்றளவு தனது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த போது அவரை ஊக்குவிக்க மனமில்லாத இறுகிய மனம் கொண்டவர்கள் எல்லாம்,

சமூகத்திற்கு ஏற்படவிருக்கும் இழப்புகளையும், சமூகத்தின் மீதான பிற சமூகத்தினரின் காழ்ப்புணர்ச்சிகளை குறைத்து கொள்ளவும் தூர நோக்குடன் எழுதப்பட்ட கடிதத்தினை விமர்சிக்க முண்டியடிக்கின்றதை பார்க்கின்ற போது நகைப்பு வந்தாலும் மனதில் வலியும் வருகின்றது.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், பொய் பிரச்சாரங்களின் போது முஸ்லிம்கள் தொடர்பாகவும், முஸ்லிம்களின் தேசத்திற்கான பங்களிப்பு தொடர்பாகவும்,

முஸ்லிம்களை எதிர்ப்பவர்களின் கோஷங்கள் தவறென்று அவர்களுக்கு விளங்க வைக்கவும் ஹனீபா மதனி எடுத்த முயற்சியை எல்லாம் ஊக்குவிக்காமல் வாய் மூடி மௌனிகளாக இருந்தவர்கள்  இப்போது விமர்சனைக்கணைகளைத் தொடுக்கின்றனர்.

சரியோ பிழையோ ஞானசார தேரரின் விடுதலையானது நடக்கும் என்பதை அனைவராலும் ஊகிக்க கூடிய ஒன்றாக காணப்படிகின்றது.

குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கூட அதை உறுதி செய்யும் வகையில் இறுதியாக இடம்பெற்ற பிரதமர் பதிவியேற்பு வைபவத்தில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் தான் மிகக்கட்சிதமாக கட்டமைக்கப்பட்ட, நாட்டில் வாழுகின்ற அனைத்து சமூகம் தொடர்பான உதாரணங்களாக கொள்ளக்கூடிய பிரச்சினைகளயும் உள்ளடக்கிய கடிதத்தினை எழுதியிருக்கிறார்.

“பொது மன்னிப்பு என்பது ஒரு குற்றவாளிக்கு அளிக்கிப் படுகின்ற சலுகையே தவிர ஒரு நிரபராதிக்கல்ல.

கடிததத்தின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை பொது மன்னிப்பு என்ற சொல்லும், அப்பொது மன்னிப்பினூடக விடுவிக்கப்படுகின்ற குற்றவாளிகள் திருந்தி நாட்டையும், பிற சமூகத்தையும், நாட்டின் சட்ட திட்ங்களையும் மதித்து வாழ வழி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளும் எத்தி வைக்கபட்டுள்ளது.

எனவே இங்கு ஞானசார தேரர் தவறிழைக்காதவர் என்று எங்கும் குறிப்பிட படவில்லை”

ஏனைய சமூகங்களும் மகிழ்ச்சியுறுவர் என்று கூறப்பட்டிருப்பது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையுடனும், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திற்கான தீர்ப்புடனும் தொடர்பு படுத்தி சொல்லப்பட்டிருந்தாலும் விமர்சிப்பவர்கள் அதனை தேரரின் விடுதலையுடன் மாத்திரம் தொடர்பு படுத்தி விமர்சிக்கின்றனர்..

தேரரின் விடுவிப்பின் மூலம் ஜனாதிபதி பௌத்த மக்களின் மனங்களில் இடம் பிடிப்பார் என்று கூறியவர் ஏனைய சமூகங்களின் மனங்களில் தமிழ் கைதிகளுக்கான புனர்வாழ்வு, நுரைச்சோலை வீட்டு திட்டத்திற்கான தீர்வு போன்ற விடயங்களினூடாக இடம் பிடிக்கலாம் என்றும்

அம்மக்கள் அதனூடாக மகிழ்வுறுவர் என்றும் மிகக்கச்சிதமாக கடிதத்தில் தெரிவித்திருப்பது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு குறிப்பாக பௌத்த குருமாருக்கு கடந்த காலத்தில் செய்த உதவி ஒத்தாசைகளையும் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இருந்த போதும் விமர்சிப்பவர்கள் கடித்தின் கட்டமைப்பை உள்நோக்காமல் விமர்சிக்க வேண்டும் என்பதற்காக விமர்சித்து கொண்டிருக்கான்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *