மலையகத்தின் அடையாளங்களை தேசியமயப்படுத்துவோம்!

சமூக மாற்றத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது.அந்த வகையில் கணபதி த.ம.வித்தியாலயத்தில்   இடம்பெறும் பொங்கல் விழாவில் நானும் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்று
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ராம் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன், கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில்( 03) சனிக்கிழமை இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
வித்தியாலத்தின் அதிபர் சிவானந்தராஜா தலைமையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வில் ,
அட்டன் வலயக்கல்வி பணிமனையின் உதவிக்கல்வி பணிப்பாளர். அந்தனி பெனோன்டோ , வளவாளர் ஸ்டாலில் சிவஞானஜோதி, உட்பட பலர்    கலந்து கொண்ட நிநழ்வில் , உறுப்பினர் ராம்  பாடசாலையின் வாசிகசாலைக்கு ஒருத்தொகை புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வைத்து,  தொடர்ந்து உரையாற்றுகையில்
மலையக   தமிழர்களாகிய நாம்  இலங்கையில் இருநூறு வருட வரலாற்றை கொண்டிருந்தாலும் இன்றும் சிறுபன்மை இனமாகவே இருக்கின்றோம்,
மலையக தமிழர்களாகிய நாம்  கல்வித்துறை, வர்த்தகதுறை, அரசதுறைகள், மற்றும் , மலையக  சமூக  கலை,பண்பாடு, சமயவழிபாடுகள்,கலாசாரம், விளையாட்டு, என எமது அடையாளங்களை பேனி வளத்து எமது இனத்தின் அடையாளத்தை தேசியமயமாக்க வேண்டும்.
அவ்வாறான கட்டமைபே என்மை தேசிய இனத்திற்கான வித்தாக அமையும் அந்த வகையால் , தமிழர்களின் தேசிய பண்டிகையான பொங்கல் விழா பாடசாலை மட்டங்களில் இடம்பெற்று மாணவர் சிறுவர்களிடத்தில் பொங்கல் விழாவின் சிறப்பை எடுத்தியம்பும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது.
தொடர்ந்து இவ்வாறான கலை, கலசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *