ஏழு மாத ஆண் குழந்தையை கழுத்தை நெறித்து கொலைசெய்துவிட்டு தாயும் தற்கொலை! சோகத்தில் மூழ்கியது கொட்டகலை!

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர்,  தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு  தானும்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

26 வயதான கே.நித்தியகல்யாணி என்பவரே குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் 27.01.2019 அன்று நள்ளிரவு உறவினர்களுடன் வீட்டில் இருந்துள்ளதுடன் வீட்டிற்கு வெளியில் கொய்யாபழ மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயின் சடலத்தையும், குழந்தையின் சடலத்தையும் 27.01.2019 அன்று காலை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, குறித்த பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும்,  குறித்த பெண்ணும், குழந்தையும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறெவரும் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

அட்டன் நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *