மஹிந்தவின் அலுவலகத்தில் ரணிலின் படம்!
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகத்திலும் இன்று கடமைகளை ஆரம்பித்தார்.
பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கே அதிக சிறப்புரிமைகளும், அதிகாரங்களும் இருக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவருக்கென நாடாளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் தனி அலுவலகமொன்று இருக்கின்றது.பணியாட்களும், வாகனங்களும் அரசாங்க செலவிலேயே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே செயற்பட்டார். அவரின் கதிரையிலேயே மஹிந்த இன்று அமர்ந்தார்.
அத்துடன், இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்க, நிமல்சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்களின் படங்களும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.