‘ஊழல் பெரிச்சாலிகளை பிடிக்க சிவப்பு பூனை’ ! கோப் குழுவின் தலைவராக சுனில் ஹத்துனெத்தி நியமனம்!

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கோப் (COPE)  தலைவராக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் னில் ஹந்துன்நெத்தி இன்று மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

கோப் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இதன்படி ரவூப் ஹக்கீம், சுஜீவ சேனசிங்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ. பெரேர, வசந்த அலுவிகார, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன்
செனவிரத்ன,

சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ரவீந்திர சமரவீர,சுனில் ஹந்துன்நெத்தி, மவை சேனாதிராசா மற்றும் ஜயந்த சமரவீர
ஆகியோர் குழு உறுப்பினர்களாக பதவி வகிக்கின்றனர்.

பிணைமுறி மோசடியை இக்குழுவே அம்பலப்படுத்தியிருந்தது. அத்துடன், ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு முதற்தடவையாக கோப் குழுவின் தலைமை பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால், நாடாளுமன்ற குழுக்கள் செயழிழந்தன. இந்நிலையிலேயே கோப்குழுவுக்கு புதிய தலைவராக சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *