நாட்டில் ஒரு அங்குலத்தையேனும் விட்டுக்கொடுக்கமாட்டோம் – மகாநாயக்க தேரர்களிடம் ஐ.தே.க. உறுதி!

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.’

மல்வத்து பீட மகாநாயக்கர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டினது நலனிற்கு எதிரான செயற்பாடுகளில் எமது ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஈடுபடுவதற்கு எமது உறுப்பினர்களுக்கும் இடமளிக்கப்போவதில்லை.

மக்கள் நலனையே முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியினைக் கையேற்றுள்ள நாம் எச்சந்தர்ப்பத்திலும் நாட்டினைப் படுகுழிக்குள் தள்ளப் போவதில்லை.

இந்த நாட்டின் நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டைப் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக சிலர் கூறிவருகின்றனர்.

ஆனால் இந்தத் தகவல்களில் எந்த உண்மையுமில்லை. நாட்டின் மீது தேசப்பற்று அற்றவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களைக் குழப்புகின்றனர்” என அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *