28 கட்சிகள் தாமரை மொட்டுடன் சங்கமம் – ‘மெகா’ கூட்டணி அமைக்க பஸில் வியூகம்!

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைவதற்கு 28 அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியன இணக்கம் வெளியிட்டுள்ளன என்று முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இவற்றின் ஆசியுடன் ‘மெகா’ கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மினுவாங்கொடை தொகுதிக்கான கூட்டத்தில் பஸில் ராஜபக்ச இன்று பங்கேற்றார்.சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினாக்களைத் தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த அவர்,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து  2015 ஜனவரி 8 ஆம் திகதியே நான் விலகிவிட்டேன். தற்போது பலமானதொரு கட்சி கட்டியெழுப்பட்டுள்ளது. இதன் ஊடாகவே தேர்தல்களுக்கு இனி முகங்கொடுப்போம்.

எம்முடன் கூட்டணி வைப்பதற்கு 28 அரசியல் கட்சிகள் – அமைப்புகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. எனவே, பரந்தப்பட்ட கூட்டணியுடன்தான் பொதுத்தேர்தலில் களமிறங்குவோம்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவரத்தை உரிய நேரத்தில், உரிய வகையில் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார்.” என்றார் பஸில் ராஜபக்ச.

அதேவேளை, கண்டி, குருணாகலை , யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கட்சி நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக மஹிந்த தரப்பால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *