அலையில் சிக்குண்டு மீனவர் ஒருவர் மரணம்! – வடமராட்சி கிழக்கில் துயரம்

யாழ். வடமராட்சி கிழக்கில் கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு, தாளையடியைச் சேர்ந்த அருளானந்தம் யோண்சன் அருள்தாஸ் (ராஜன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனப் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவர் நேற்றுக் காலை கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது கடல் அலை இழுத்துச் சென்றது. அருகிலிருந்தவர்களால் அவர் காப்பாற்றபட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *