சந்திரிக்காவின்  இரகசிய ‘ஒப்பரேஷன்’! தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு!!

மைத்திரிபால  சிறிசேனவை  பொதுவேட்பாளராகக் களமிறக்கி –ஜனாதிபதி பதவியை வழங்கி  அழகுப்படுத்தி பார்த்ததில் சந்திரிக்கா அம்மையாருக்கும் பெரும்பங்குண்டு.

தெற்கில் சர்வபலத்துடனும் அரசியல் நாயகனாக  வலம்வந்த மஹிந்த ராஜபக்சவை கனவில்கூட எதிர்ப்பதற்கு அவரின் சகாக்கள் அஞ்சினர். ‘ இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்’  என்ற கோட்பாட்டுக்கமையவே ஆட்சியை முன்னெடுத்தார் மஹிந்த.

அவர் பயணிக்கும் வழி தவறென தெரிந்தும் அதை சுட்டிக்காட்ட – தட்டிக்கேட்க கட்சிக்குள் எவருமே முன்வரவில்லை.  அனைவருமே ‘ஆமாம் சாமி’ போடுவதையே உயரிய அரசியல் கொள்கையாக கருதிசெயற்பட்டனர்.

இதை  துணிகரமாக சுட்டிக்காட்டிய ஒரு சில ஊடகவியலாளர்களும் ‘சு(இ)டுகாட்டு’ காவியத்தில் இணைந்தனர்.

இவ்வாறானதொரு  பின்புலத்தில்தான்  மஹிந்தவுக்கு  எதிரான ‘ஒப்பரேஷனை’ மறைமுகமாக முன்னெடுத்தார்  சந்திரிக்கா அம்மையார்.

சுதந்திரக்கட்சியில்  அதிருப்திநிலையில் இருந்த உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சு நடத்தினார். சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டுக்கு  உயிர்கொடுத்தார்.

சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை, மஹிந்தவுக்கு எதிராக களமிறக்க  அதிஉச்ச பங்களிப்பை வழங்கினார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதிதான்  இது வெளிச்சத்துக்கு வந்தது. சு.வின்  முக்கிய 10 புள்ளிகளுடன் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி – மஹிந்தவுக்கு மரணபீதியை ஏற்படுத்தினார்.

இவ்வாறு  மைத்திரிகாக தீயாக இறங்கிவேலை செய்த சந்திரிக்காவை,  ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளார். கட்சிக்கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்காமல்  அவரை அவமதிக்கும் வகையில்  மைத்திரிபால சிறிசேநன அரசியல் நடத்திவருகிறார். இதனால், சந்திரிக்கா அம்மையார் கடும் சீற்றத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமல்ல தாய்க்கட்சியான சுதந்திரக்கட்சியை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சங்கமிக்கவைக்க சிலர் எடுத்துவரும் முயற்சியும் சந்திரிக்காவை சினங்கொள்ளவைத்துள்ளது. எனவே, விரைவில் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் வியூகமொன்றை அவர் வகுப்பார் என்றே அத்தனகல பகுதியிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *