அஷ்ரபின் கனவை நனவாக்க; ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பேராளர் மாநாடு

மர்ஹும் அஷ்ரபினை தலைவனாக்கி, சமூகத்தை ஒழுங்கு படுத்தி அழகு பார்த்த முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும்இ செயலாளர் நாயகமுமான எம்.டி.ஹஸனலி, அஷ்ரபின் கனவை நனவாக்கஇ அவரது யாப்பிற்கு உயிர் கொடுத்து அவர் விட்ட இடத்தில் இருந்து சமுகப்பணியை தொடர கிழக்கினை மையப்படுத்திய தலைமையினை உருவாக்கும் நோக்கில், அஸ்ரப் தனது முதலாவது கூட்டத்தை காத்தான்குடியில் நடத்தி தனது பயணத்தினை ஆரம்பித்தது போல்இ ஹஸனலியும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 2018.12.23 ம் திகதியன்று காத்தான்குடியில் நடாத்தி தனது சமூக பணிக்காக ஆரம்பித்த பயணத்தினை தொடர்கின்றார்.

எமது சமூகத்துக்குரிய தேவைகளும் அதற்குரிய பணிகளும் பெருந்தலைவர் அஷ்ரபின் மறைவிற்குப் பின் எந்த இடத்தில் நின்றதோ அதே இடத்தில் இருந்தே நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். இரண்டு தசாப்தங்களை நம்பி வீணடித்து விட்டது போல் இனியும் வீணடிக்க எவருமே தயாரில்லை. எமது மண்ணின் தேவைகளை நாமே தேடிப் பெற்றுக் கொள்வோம். அது எம்மால் முடியும். எமது காலில் நாம் நிற்போம். இனி எம்மை நாமே ஆள்வோம். எதற்காக ஆரம்பித்தோமோ அதற்காகவே ஒன்றுபடுவோம்இ முஸ்லீம் தேசியத்தை மீட்டெடுக்கும் நமது பயணத்தை தொடர்வோம்.

எமது சமூகத்துக்கு தேவையானவைகளை பெற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவைகளை தவற விட்டது போல் இனி அந்த தவறவிடும் தவறுகளை நாங்கள் செய்ய மாட்டோம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி பணியகம், இளைஞர் சேவைகள் மன்றம் போன்ற தாபனங்கள் கல்முனையில் இருந்து பறிபோகும் போது அதனை தடுக்கும் சந்தர்ப்பங்கள் பல இருந்தும் விலை போன அரசியல் முகவர்களால் மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலையினை உருவாக்கிய தரகர்களால் எம்மை பெரும்பான்மைக்கு அடகு வைத்த நபர்களால் முகவரிகளை இழந்து விட்ட கட்சிகளினால் வாய் மூடாமலேயே மௌனியாக இருக்க வேண்டியிருந்தது.

இதனால் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, நஷ்டங்களை, கஷ்டங்களை எங்களால் ஒரு போதும் மறக்க முடியாது. இழந்தவைகளைப் பெற நாம் முன்னிற்க வேண்டும். அரசியல்வாதிகள் மாத்திரமல்ல எமது மக்களும் எமது முஸ்லீம் தேசியத்தினை பெற்றுக் கொள்வதில் உணர்வோடு இருக்க வேண்டும்.

நாம் இழந்த 60000 ஆம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள், நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம், திகாமடுல்ல மாவட்டத்தில் இருந்து பிரித்து எடுக்க வேண்டிய கல்முனை தேர்தல் மாவட்டம், ஏற்கனவே நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டும், அதிகார ரீதியான சபையாக இயங்குவதற்குரிய அங்கீகாரம் இன்று வரை கிடைக்கப் பெறாத சாய்ந்தமருது, வாழைச்சேனை, மூதூர் போன்று பேசித் தீர்த்து பெற்றுக்கொள்ள வேண்டிய பிரதேச சபைகள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என வரும் போது முஸ்லீம்களுக்கு நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு அல்லது அதற்கு சமமான கரையோர மாவட்டம், முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு, கல்வியில் அபிவிருத்தி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம்களது பரம்பலுக்கு அமைவான வள, அதிகாரப்பங்கீடு என இன்னும் எத்தனையோ தேவைகளை, பல வழிமுறைகளினால் எமது சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கேற்ற முறையில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புக்களை, கொடுக்க வேண்டிய குரல்களை, மீள்நிர்ணயம் செய்ய வேண்டிய தேவைகள் எங்களது சமூகத்துக்கு காணப்படுகிறது. இவைகளை ஒழுங்குபடுத்தி, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய கடமை எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பிற்கு காணப்படுகிறது. இவைகளை முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஒத்தாசையினையும், ஆதரவினையும் எங்களுக்கு வழங்க வேண்டிய உறவும், கடமைப்பாடும் மக்களாகிய உங்களுக்கும் காணப்படுகிறது.

எங்களது செயற்பாடுகளை அவதானித்தவர்களாகவே மக்கள் செயற்பட வேண்டும். எமது கட்சியின் செயற்பாடுகளை 2018 .12 .23 அன்று காத்தான்குடியில் நடைபெற இருக்கும் எமது கட்சியின் பேராளர் மாநாட்டில் மக்களாகிய உங்களால் நேரடியாக கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதனை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

ஐ .எம். ஹாரிப்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *