இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை! – இப்படிக் கூறுகின்றார் படைப் பேச்சாளர்

இராணுவத்தினர் எவரும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், போர்க் காலத்தில் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு பக்கத்திலும் தவறுகள் இடம்பெற்றன. தற்போதும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழ்கின்றனர். அவ்வாறிருக்கையில் இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்துவது ஏற்கப்பட முடியாததாகும். சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவச் சிப்பாய்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *