இலங்கையில் ஆட்சி மாற்றம்: ஆஸ்திரேலியாவும் பாராட்டு!
இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாக கொழும்பிலுள்ள ஆஸ்திரேலியத் தூதுவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“இந்தியப் பெருங்கடலில் நீண்டகால நண்பர்கள் என்ற ரீதியில், இலங்கையின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கின்றோம். அது இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகின்றது” எனவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழுமைக்காக இலங்கையுடனான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இரு நாடுகளுக்கிடையில் உறவைப் பலப்படுத்தவும் எதிர்பார்ப்பதாகவும் ஆஸ்திரேலியத் தூதுவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.