‘ஹிட்லர் ஆட்சி எமக்கு வேண்டாம்’ – ஹட்டனில் ஓங்கி ஒலித்தது ஜனநாயகத்துக்கான கோஷம்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் இளைஞர் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு உடன் முடிவு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமையை முற்றாக ஒழிப்பேன் என 2015 ஆம் ஆண்டு சபதமெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த உறுதிமொழியை மீறி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் செயற்படுகின்றனர்.  மக்களுக்கு தேவை அரசியல் யாப்பா அல்லது அரசியல் ஆப்பா?, ஹிட்டல் ஆட்சி எமக்கு வேண்டாம். ” என்றும் போராட்டக்காரர்கள்  கோஷமெழுப்பினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம்கொடுக்கும் வகையிலேயே அவ்ஆர்ப்பாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

க. கிசாந்தன்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *