ஜனாதிபதி, சபாநாயகர் நேரில் பேச்சு – தூதூப் புறாவாக விஜயதாச களத்தில்!

ஜனாதிபதியும், சபாநாயகரும் நேரில் சந்தித்துபேச்சு நடத்தி, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்றும், இதற்கான இணைப்பாளராக செயற்பட தான் தயார் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்திருந்த நிலையில், அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மாத்திரம் அவைக்கு வந்திருந்தார். ஆளுங்கட்சி வரிசையில் தனியாக அமர்ந்திருந்து விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார்.

” நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கத்துறையும் முட்டிமோதும் நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியால் எடுக்கப்படும் முடிவை நாடாளுமன்றம் ஏற்கமறுப்பதும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதி நிராகரிப்பதுமென இந்த முரண்பாடு தொடர்கிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும். ஜனாதிபதியும், சபாநாயகரும் நேரில் சந்தித்து பேசினால், இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும். இதற்கு ஜனாதிபதி தரப்பிலும் சாதக சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு மத்தியஸ்தம் வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன.

அதேவேளை, பெரும்பான்மை உள்ள தரப்புக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும்” என்று குறிப்பிட்டார் விஜயதாச ராஜபக்ச.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

” ஜனாதிபதியை சந்திப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எமக்கிடையே புரிந்துணர்வு இருக்கின்றது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பற்கே நான் பாடுபடுகின்றேன்” என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *