தள்ளாடுகிறது பொருளாதாரம் – இரட்டைச் சதமடிக்குமா டொலர்?

அரசியல் குழப்பம் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. மறுபுறத்தில் ரூபாவின் பெறுமதியும் சரிந்துள்ளது.

மத்தியவங்கியினால் இன்று (28) வௌியிடப்பட்ட நாணயமாற்று வீதங்களின் அடிப்படையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 182. 2733 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 178 ரூபா 33 சதமாகப் பதிவாகின்றது.

அதேவேளை, வெளிநாட்டு முதலீடுகளும் குறைவடைந்துவருகின்றன. அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்நிலைமை மேலும் மோசமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுலாத்துறையும் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. நிர்வாக இயந்திரத்தை இயக்குவதற்குரிய எந்தவொரு சட்டமூலமும் கடந்த ஒருமாதகாலமாக நிறைவேற்றப்படவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *