குழந்தைகள் விரும்பும் பிரபல சாக்லேட்டில் பரவும் நோய்க்கிருமி நிறுவனம் அதிரடி முடிவு!

சால்மோனெல்லா நோய்க்கிருமி பரவும் என்ற கவலையின் காரணமாக, சுவிஸ் சில்லறை விற்பனையாகங்களில் இருந்து கிண்டர் சாக்லேட்டுகளை வைக்கவேண்டாம் என Ferrero நிறுவனம் கேட்டுள்ளது.

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான சாக்லேட்டாக இத்தாலியைச் சேர்ந்த Ferrero நிறுவனத்தின் சாக்லேட்கள் உள்ளன. Ferrero என்று சொன்னால் கூட பல பேருக்கு தெரியாது. ஆனால், Kinder Joy, Kinder Surprise என்று சொன்னால் பெரும்பாலானோருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கும், குழந்தைகள் உள்ள வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியும்.

சமீப நாட்களாக உலக நாடுகள் பலவற்றில் Kinder Surprise சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா எனும் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. இதனால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைகளுக்கு ஆளானதால் மக்களிடையே பயம் அதிகரித்தது. ஆனால் இது குறித்து அறியாமல் இன்னும் ஏராளமாக மக்கள் இருக்கின்றனர்.

சால்மோனெல்லா பாக்டீரியா, பொதுவாக விலங்குகளின் மலம் அல்லது மனித மலம் அல்லது அசுத்தமான உணவுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளை ஏற்படும். சில நேரங்களில் அறிகுறிகள் எதுவும் இருக்காது. இதனால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் சில நாட்களுக்குள் குணமடைவார்கள், ஆனால் சிலர் சிக்கல்களை அனுபவிக்கலாம்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் Kinder வகை சாக்லேட்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுவருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உணவுத் துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், ஃபெர்ரெரோ நிறுவனமே தனது தயாரிப்புகளை திரும்பப் பெறுவதைத் தடுப்பதாக விவரித்தது மற்றும் இந்த தயாரிப்புகளை வாங்கியவர்கள் அவற்றை சாப்பிட வேண்டாம் என்றும், பணத்தைத் திரும்பப்பெற ஏற்பாடு செய்ய நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட தயாரிப்புகளில் mini Kinder eggs, Kinder Surprise eggs மற்றும் Schokobons ஆகியவை அடங்கும்.

ஐரோப்பா முழுவதும் கிண்டர் சாக்லேட் மட்டும் சால்மோனெல்லா பாக்டீரியா தொடர்பாக சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்து பெல்ஜியத்தில் உள்ள ஆர்லோனில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கிண்டர் தயாரிப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஃபெரெரோவின் அறிவிப்புக்குப் பிறகு, சுவிஸ் சில்லறை விற்பனையாளர்களான லாண்டி, டாப்ஷாப், வோல்க் மற்றும் பிரைமா ஆகியவை தயாரிப்புகளை தங்கள் அலமாரிகளில் இருந்து அகற்றியதாக ஆர்டிஎஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *