வலி.கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக இன்று உறுதியுரை!

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில், தமிழீழ விடுதலைப் போரில் ஆகுதியாகிய வீரமறவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளதுடன் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் இன்று காலை 9 மணிக்கு உறுதியுரையும் எடுத்துக்கொண்டனர்.

இன்று காலை பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் ஒன்று தவிசாளர் மற்றும் வருகைதந்த உறுப்பினர்கள் ஒன்றுகூடினர்.

அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வுகளில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உப தவிசாளார் மகேந்திரலிங்கம் கபிலன் ஆகியோரைத் தொடர்ந்து உறுப்பினர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி மாவீரர்களை அஞ்சலித்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள், தனித்தனியே உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.

“மாவீரர்களை இந் நாளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாம் அஞ்சலிக்கின்றோம். மாவீரர்கள் எமது மண்ணுக்காக தம்மையே அர்ப்பணித்தார்கள். உடல், பொருள், ஆவி என சகலவற்றை எமது மக்களின் விடிவுக்காக அர்ப்பணித்தார்கள். அவர்களை நாம் ஒவ்வொரு துளியும் நாம் நினைவுகூர்ந்து எமது மக்கள் பணியை அர்ப்பணிப்புடனும் இலட்சியத்துடனும் முன்னேடுப்போம்” என்று உறுதியுரையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *