நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக 17 மனுக்கள் தாக்கல்! – இன்றே ஆராய்கின்றது பிரதம நீதியரசர் தலைமையிலான குழாம்

நாடாளுமன்றம் அரசமைப்புக்கு முரணாக வகையில் ஜனாதிபதியால் முன்கூட்டியே கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட 17 தரப்புக்கள் இன்று காலை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்றே பரிசீலிக்க உயர்நீதிமன்றம் முடிவெடுத்தது.

மனுக்கள் யாவும் உயர்நீதிமன்ற பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் ஆராயப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *