மைத்திரியின் மகளுக்கும் மொட்டுமீது ‘லவ்’ – பொலன்னறுவை மாவட்டத்தில் களமிறங்க முடிவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேனவும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், தாமரை மொட்டு சின்னத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
மாகாணசபைத்தேர்தல் ஊடாக கன்னி அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு சத்துரிக்கா திட்டமிட்டிருந்தாலும், நாடாளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார்.
தேர்தலை இலக்குவைத்து புரப்புரை நடவடிக்கையிலும் அவர் முன்கூட்டியே இறங்கியுள்ளார்.
பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து, மொட்டு சின்னத்திலேயே சுதந்திரக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சு.கவின் முக்கிய புள்ளிகள் மஹிந்த பக்கம் தாவியுள்ளதால், மைத்திரிக்கு வேறுவழியில்லை எனவும் கூறப்படுகின்றது.
எனவேதான், மைத்திரியின் மகளும் மொட்டுடன் சங்கமிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.