நாடாளுமன்றம் கலைக்கப்படாது! ஐ.தே.கவின் கட்டுக்கதையை நம்பாதீர்!! – இப்படிக் கூறுகின்றனர் மைத்திரி – மஹிந்த

இலங்கையின் தற்போதைய அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்கியுள்ளார் எனவும், பெரும்பாலும் இன்று நள்ளிரவு சபையைக் கலைக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், புதிய அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் எம்.பிக்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று மாலை அவசரமாக அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

இதன்போது, “113 உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலம் எங்களிடம் உள்ளது. அதனை நாடாளுமன்றத்தில் நிரூபித்துக் காட்டுவோம். எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது. நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பில் ஐ.தே.கவினர் கட்டுக்கதைகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை எவரும் நம்பவேண்டாம்” என்று ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் மஹிந்தவும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *