சமல், எஸ்.பிக்கு கபினட்! பவித்ராவுக்கு இராஜாங்கம்!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலும் புதிதாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமல் ராஜபக்ஷ சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சராகவும், எஸ்.பி.திஸாநாயக்க பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி பெற்றோலியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமணம் செய்துள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *