சிவசக்தி ஆனந்தன் மீது சார்ள்ஸ் எம்.பி. பாய்ச்சல்!
“என் மீது குற்றம் சுமத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் நடைமுறை அரசிடம் இருந்து 30 கோடி ரூபா பணம் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளமைக்கு எதிராக கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு முறைப்பாட்டுப் பணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடொன்றைச் செய்துள்ளேன்” – என்றார்.
தற்போது நாட்டில் நிலவும் குழப்பகரமான அரசியல் சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கேட்டபோதே சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.