ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு! – சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 118 இற்கும் மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து

நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 118 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை அரசமைப்பின்படி சட்டவிரோதமானது எனவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் மூலம் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண எதிர்வரும் 16ஆம் திகதி வரை பொறுக்காமல் சபையை உடனடியாகக் கூட்டுமாறும் சபாநாயகரிடம் இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடும் எனவும், அதுவரை அமைதி காக்குமாறும் இவர்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *