இலங்கையில் ஜூன் 7 வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு!

👉 நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும். அதன்பின்னர் அன்றிரவு 11 மணி முதல் பயணத்தடை மீள அமுலாகும்.

👉 26,27,28,29, 30 ஆம் திகதிகளில் பயணத்தடை முழுமையாக அமுலில் இருக்கும். 31 ஆம் திகதி காலை 4 மணிக்கு பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும்.

👉 31 ஆம் திகதி இரவு 11 மணி முதல் ஜுன் 3 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும்.

👉 ஜுன் 4 ஆம் திகதி காலை பயணக்கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும். அன்றிரவு 11 மணி முதல் ஜுன் 6 ஆம் திகதிவரை பயணத்தடை நடைமுறையில் இருக்கும். 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

👉 பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே அதுவும் அருகிலுள்ள கடைக்கு செல்ல வேண்டும்.

👉 முடிந்தளவு நடந்துசெல்லக்கூடிய தூரத்துக்கு செல்லவும். வாகனங்களில் செல்வதை தவிர்த்துக்கொள்ளவும்.

👉 மருந்தகங்கள் அனைத்தும் திறக்கப்படும்.

👉மதுபானசாலைகள் தொடர்ந்தும் பூட்டப்பட்டிருக்கும்.

👉 விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி.

👉 நடமாடும் பொருட்கள் விநியோக சேவையை முன்னெடுக்க அனுமதி.

👉 பொலிஸ் கண்காணிப்பு தொடரும்.

👉 கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *