பொன்சேகா – விஜயதாச மோதல் உக்கிரம் ! ‘டீல் தாச’ என்றெல்லாம் விமர்சிப்பு!!

விஜயசாச ராஜபக்சவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத்பொன்சேகாவுக்குமிடையிலான சொற்போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது.


ரணில் விக்கிரமசிங்கவின் காலைவாரிவிட்டு, மஹிந்த – மைத்திரி கூட்டணியுடன் சங்கமித்துள்ள விஜயதாச ராஜபக்சவை, ‘டீல்தாச’ என பொன்சேகா விமர்சித்துள்ளார்.

அத்துடன், எவன்கார்ட் நிறுவனத்தின் பிரதானியுடன் விஜயதாச தொடர்பை பேணிவந்தார் என்றும், இவர் கொள்கையற்ற அரசியல்வாதி என்பதை தான் அன்றே சொன்னார் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டரசில் அங்கம் வகிக்கும்போது இருவருக்குமிடையே கடும் சொற்போர் ஏற்பட்டது. அமைச்சரவைக் கூட்டங்களிலும் இருவரும் மோதிக்கொண்டனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் முறுகல் வெடித்துள்ளது.

தன்னை டீல்தாச என விமர்சிக்கும் பொன்சேகா, கண்ணாடியை ஒருமுறை பார்ப்பாரானால் உண்மை தெரியவரும் என விஜயதாச பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *