இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்: நெதன்யாகுவுடன் ஜோ பைடன் அவசர ஆலோசனை

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதால் அமெரிக்கா இந்த விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக அந்நாட்டு இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு கருத்து வெளியிடடுள்ளார்.

அந்த பகுதியில் உள்ள இஸ்ரேல் அல்லது அமெரிக்க சொத்துக்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.

அடுத்த வாரத்தில் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க இராஜதந்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாங்கள் நிச்சயமாக உயர் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்கிறோம்,” என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இஸ்ரேலிய போர் விமானங்கள் திங்களன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் ஈரானிய முக்கிய இராணுவத் தளபதி கொல்லப்பட்டார். அத்துடன், 7 இராணுவ வீரர்களும் இறந்தனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், போரில் ஒரு பெரிய விரிவாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை, ஒரு தீர்க்கமான பதிலை ஈரான் எடுக்கும்” எனக் கூறியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஈரானின் அச்சுறுத்தல் குறித்து தொலைபேசி ஆலோசித்துள்ளார்.

“ஈரானில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது” என பைடனின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *