சிறுமியின் முடியை வெட்டிய ஆசிரியை 1 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு!

அமெரிக்காவில் பெற்றோரின் அனுமதியின்றி 7 வயதுச் சிறுமியின் முடியை ஆசிரியை வெட்டியதை அடுத்து, ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு சிறுமியின் தந்தை வழக்குப் பதிவு செய்துள்ளார்.

பள்ளி மீதும் இரண்டு ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி Jurnee-யின் தந்தையான ஜிம்மி ஹாஃப்மேயர் (Jimmy Hoffmeyer) தமது மகளின் உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இனப்பாகுபாடு காரணமாக இவ்வாறு நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தை தொடர்ந்தது அவர் தனது மகளைப் பள்ளியிலிருந்து விலக்கி விட்டார்.

மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஜூலையில், பள்ளி நடத்திய விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியை பள்ளிக் கொள்கையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு செய்ததற்கு இனப் பாகுபாடு காரணமல்ல என்று பள்ளி தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட ஆசிரியை் கண்டிக்கப்பட்டார். ஆனால், அவர் தொடர்ந்து பணியில் உள்ளார்.

முதலில் சக மாணவர் தமது மகளின் முடியை ஒரு பக்கம் வெட்டியதாகவும், மறுநாள் பள்ளி ஆசிரியை தம் மகளின் முடியின் இன்னொரு பக்கத்தை வெட்டியதாக ஹாஃப்மேயர் குறிப்பிட்டார்.

முடியைச் சீர் செய்வதற்காக ஆசிரியை அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *