Coventry University மற்றும் இலங்கையின் IIHS நிறுவனம் இணைந்து உயிர் விஞ்ஞான இளமானி பட்டப்படிப்பு பாடநெறி அறிமுகம்

அறிவுபூர்வமான சுகாதார வல்லுநர்களை உருவாக்கும் நோக்கத்துடன் Bachelors in Biomedical Sciences (உயிர் விஞ்ஞானம் இளமானி பட்டம்) பட்டப்படிப்பு பாடநெறியை வழங்குவதற்கு ஐக்கிய இராச்சியத்தின் Coventry பல்கலைக்கழகம் இலங்கையின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) நிறுவனத்துடன் இணைகிறது. நோய்களை அறிந்துகொண்டு அவற்றுக்கு பயன்மிக்கதாக சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அறிவை வழங்கும் உயிர் விஞ்ஞானக் கல்வி மருத்துவக் கல்வியின் முதன்மையான அங்கமாக விளங்குகிறது.

அது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அறிவை மேம்படுத்தல், விஞ்ஞான ஆய்வுக் கூட கண்டுபிடிப்புகளை சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் உலகளாவிய ரீதியில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு தேவையான நவீன தொழில்நுட்ப உத்திகள் தொடர்பான அறிவை வழங்குகிறது.

உயிர் விஞ்ஞானக் கல்வி தொடர்பான பட்டப்படிப்பை கற்பதற்கு பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவு செய்ய வேண்டியது முக்கிய காரணியாக விளங்குவதோடு 22 வருடங்களாக 3,000 இற்கும் மேற்பட்ட சுகாதார வல்லுநர்களை உருவாக்கியுள்ள IIHS நிறுவனம் இத் துறையில் முதன்மையான நிறுவனமாக திகழ்கிறது.

2021 மற்றும் 2022 வருடங்களுக்கு ஏற்புடையதாக Guardian University பிரமாணங்களின் மூலம் Coventry பல்கலைக்கழகமும் IIHS நிறுவனமும் தொழில் கல்விக்கான ஆகச் சிறந்த ஒருங்கிணைந்த பல்கலைகழகமாக அடையாளங் காணப்பட்டுள்ளதோடு கற்பித்தல் மற்றும் வசதிகளுக்கான 5 QS Stars சான்றிதழையும் வென்றுள்ளது.

இப் பட்டப்படிப்புக்கு Institute of Biomedical Science (IBMS) மற்றும் Health and Care Professions Council (HCPC) ஆகிய நிறுவனங்களின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதன் மூலம் அதன் தரம் உறுதிப்படுத்தப்படுவதோடு, இப் பாடநெறியை கற்கும் மாணவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் உயிர் விஞ்ஞானக் கல்வித் துறை விஞ்ஞானியாக பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது. பரந்துபட்ட அறிவு மற்றும் அனுபவங்களுடன் கூடிய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகின்ற விரிவுரையாளர்களையும் உள்ளடக்கியதான விரிவுரையாளர் குழாத்தின் கீழ் முதல் நாள் தொடக்கம் உயர் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை கொண்ட விஞ்ஞான ஆய்வுக் கூடங்களில் செய்முறை கற்பித்தல் செயன்முறைகளின் கீழ் தொழில்முறை மட்டத்திலான கல்வியை உறுதிப்படுத்துவதற்கு IIHS நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய சுகாதாரச் சேவையிலோ அல்லது தனியார் துறையிலோ உயிர் விஞ்ஞானத் துறை விஞ்ஞானியாக பணியாற்றுவதற்கோ அல்லது இத் துறையில் வேறேதுனும் தொழிலை நாடுவதற்கோ ஏற்ற வகையில் இப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கும் MSc அல்லது PhD மட்டத்திலான பாடநெறிகளை கற்பதற்கும் இதன் மூலம் வாயப்பு கிடைக்கின்றது.

“மருத்துவ உதவியாளர்களாக மருத்துவ அல்லது பல் மருத்துவத் துறைக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருப்போர்களுக்கும் இந்த பாடநெறியை கற்க முடியும். விஞ்ஞான ரீதியான அறிவை வழங்குவதற்கு மேலதிகமாக இப் பாடநெறியை கற்கும் மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆற்றல், தர்க்க ரீதியான சிந்தனை மற்றும் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்துவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம். அறிவியல் துறையுடன் தொடர்புடைய மற்றும் அரச சேவை, முகாமைத்துவ மட்டத்திலான தொழில்களுக்கும் இப் பாடநெறி பெரிதும் உதவுகிறது.” என IIHS நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *