ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் உதவியை பெறுவதற்கு IIHS நிறுவனம் தகுதி

,இலங்கை சுகாதாரக் கல்வியில் முன்னோடியாக திகழும் International Institute of Health Scieces (IIHS) நிறுவனம் லங்கை வரலாற்றில் தனித்துவமான தடத்தை பதிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி நிதி நிறுவனத்துடன் Development Fnace Corporatio (DFC) ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. DFC நிறுவனம் அளிக்கும் நிதி உதவியை பெறுவதற்கானபிரமானங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள ஆசியாவின் ஒரே சுகாதார கற்கை நிறுவனம் என்ற.வரலாற்றுச் சாதனையை ,தன் மூலம் IIHS நிறுவனம் பெற்றுள்ளது.

மேற்படி நிதி IIHS Multiversity கருத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளதோடு அந் நிதியின் மூலம் IIHS நிறுவனம் தமது புதிய சூழல்நேய, பிரமாண்ட கட்டட வளாகத்தை நிர்மாணிக்கவுள்ளது. சுகாதார கல்வித் துறைக்குரிய தகைமைகளை பூர்த்தி செய்வதற்கு மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதோடு சமூக, பொருளாதாரமற்றும் சூழல் போன்ற பல்வேறு துறைகளுக்கு ஐஐர்ளு நிறுவனம் வழங்கியுள்ள மகத்தான பங்களிப்பே ,ந்நிதியை பெறுவதற்கான தகுதியை பெறுவதற்கு முக்கிய காரணியாக விளங்கியுள்ளது.மேற்படி கூட்டிணைவு தொடர்பாக அறிவிக்கும் நிகழ்வு அண்மையில் வத்தளை IIHS நிறுவனத்தில்நடைபெற்றதோடு அந் நிகழ்வில் ,லங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங், IIHS நிறுவனத்தின்பிரதம நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்க், நிறுவனத்தின் பணிப்பாளர்உட்பட மாணவ, மாணவியர்களோடு பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். ,

தன் போது கருத்துதெரிவித்த டாக்டர் கித்சிறி எதிரிசிங்க், மக்கள் சமூகம் மற்றும் நாட்டை வளர்ச்சி பாதையில் ,ட்டுச்செல்வதை பிரதான நோக்கமாக கொண்டுள்ள  IIHS நிறுவனம் ,இங்கு கல்வி கற்கும் மாணவ,மாணவியர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகிய அனைத்து தரப்புகளுக்கும் பெறுமதியை சேர்ப்பதற்குநடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். தமக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் கல்விமுறை தொடர்பாக கற்றறிவதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், அற் நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டதன்மூலம் பெற்ற அறிவை IIHS நிறுவனத்துக்குள் விதைப்பதற்கு தம்மால் முடிந்துள்ளமையிட்டு மகிழ்ச்சிஅடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ,இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அமெரிக்காவுக்கும் ,இலங்கைக்குமிடையே இரு தரப்பு உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியாகும் ,இச்சந்தர்ப்பத்தில் ,இந்நாட்டு சுகாதாரக் கல்வித் துறையின் முன்னேற்றம் கருதி IIHS நிறுவனத்துடன் கைகோர்க்க முடிந்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

அது நாட்டின் தாதியர் மற்றும் மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா நீண்ட காலமாக வழங்கியுள்ள பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். DFC பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதந்த அண்மையில் IIHS நிறுவனத்துக்கு களச்சுற்றுலாவொன்றை மேற்கொண்டிருந்தார். ,இது தொடர்பான செய்தியில், ,இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதாரப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் தெற்காசியத் தலைவராகத் திகழும் IIHS நோக்குக்காக அமெரிக்கா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் ,இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *