இலங்கையின் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய பிரித்தானியா ஆர்வம்

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் (CWEIC) நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே இவ்வாறு பிரித்தானிய நிறுவனங்களின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் பிரித்தானியாவின் 30 முன்னணி வணிகப் பிரமுகர்கள், மூலதனப் பிரதிநிதிகள், முதலீட்டு ஆலோசகர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் ஏற்கனவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள வர்த்தகர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Oruvan

‘Sri Lanka Business Drive 2024’ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த வட்டமேசை மாநாடு குறித்து கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர் போகொல்லாகம,

இலங்கை மற்றும் இங்கிலாந்து வர்த்தக சமூகத்திற்கிடையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரித்தானிய முதலீட்டாளர்கள் சிலர், இலங்கையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான யோசனைகளையும் முன்வைத்தனர்.

கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை அமைப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.

போர்ட் சிட்டியில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் முதலீட்டுகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது முதலீட்டாளர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், குறிப்பாக தற்போதைய பொருளாதார மீட்சி செயல்முறைகளில் இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.” எனவும் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *