AI தொழில்நுட்பத்துடன் அறிமுகமானது Samsung Galaxy S24..!

 

சாம்சங் நிறுவனத்தின் Galaxy S சீரியஸின் அடுத்த மாடலான சாம்சங் கேலக்ஸி S24, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த சாதனத்தின் முழு விவரங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸில், Galaxy S24, S24 Plus, S24 Ultra என்ற மூன்று மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.8 இன்ச் Amoled 2x டிஸ்ப்ளேக்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் பின்பக்க கேமரா உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்த சீரியஸின் எல்லா மாடல்களும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையாகக் கொண்ட One UI 6.1 OS-ல் இயங்குகிறது.

இந்த சாதனத்திற்கு மொத்தமாக ஏழு வருட OS மேம்படுத்தல், பாதுகாப்பு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அம்சம் என்னவென்றால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த சாதனத்தை இயக்கலாம்.

இதில் இருக்கும் அம்சங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலமாக புகைப்படங்களை எடிட் செய்வது, புகைப்படங்களை உருவாக்குவது, ஸ்லோ மோஷன் போன்ற பல சிறப்பு மிக்க விஷயங்களை செய்ய முடியும்.

இதன் விலை கூடுதலாக இருப்பது போல் தோன்றினாலும், இந்த ஸ்மார்ட் போனின் தரம் சிறப்பாக இருக்கும் என்பதால், சாம்சங் போன் ஆர்வலர்கள் இதை வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *