தொலைந்துபோன தொலைபேசியை கண்டுபிடிப்பது எப்படி?

ஏதேனும் ஒரு பிறந்தநாள் விழாவுக்கோ அல்லது திருமணத்துக்கோ அல்லது சனக் கூட்டம் இருக்கும் இடத்துக்கோ சென்றால், சில வேளைகளில் நாம் கையடக்கத் தொலைபேசிகளை மறந்து வைத்துவிட்டு வரும் சம்பவங்களும் உண்டு.

அத்தகைய சூழ்நிலைகளில் உங்கள் கையடக்கத் தொலைபேசி பக்கத்தில் இருந்தாலும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படலாம். அதுவும் பெரும்பாலான கையடக்கத் தொலைபேசிகள் சைலண்ட் மோடில் இருப்பதால் அதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டுமென்றால்,

Oruvan

How to find lose phone

முதலில் புரவுஸரை திறந்து, Google find my device இணையத்துக்கு செல்ல வேண்டும். பின்னர் உங்கள் தொலைபேசியுடன் இணைக்கப்பட்ட Google கணக்கில் உள்நுழைந்த

தும் உங்கள் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்கள் காண்பிக்கப்படும்.

இப்போது நீங்கள் அதை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்தன் பின்னர் Play sound என்ற விருப்பம் காண்பிக்கும்.

இந்த ஆப்ஷனை நீங்கள் தெரிவு செய்தவுடன் உங்கள் கையடக்கத் தெலைபேசி 5 நிமிடங்களுக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும்.

யாராவது உங்கள் கையடக்கத் தொலைபேசியை திருடி வைத்திருந்தாலும்கூட இந்த சத்தத்தை நிறுத்த முடியாது.

Oruvan

How to find lose phone

சைலண்ட் மோடில் கையடக்கத் தொலைபேசி இருந்தாலும்கூட இந்த ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.

இதனைக்கொண்டு உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.

இப்படி செய்தும் உங்கள் கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், உடனே எரேஸ் டிவைஸ் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கையடக்கத் தொலைபேசியில் உள்ள அனைத்து பைல்களையும் அழித்து விடலாம்.

இப்போது யாராலும் உங்கள் தரவுகளை திருட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *