இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா திட்டங்கள்

இலங்கையில் தற்போதுள்ள விசா நடைமுறையை தளர்த்தி புதிய விசா திட்டங்களை அறிமுக செய்யவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விசா வழங்குவது தொடர்பான அனைத்து நடைமுறைகள் மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், அனைத்து வகை விசாக்கள் தொடர்பான நடைமுறைகளை தளர்த்துவதற்கான செயல்முறையை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு டிஜிட்டல் விசாவும் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா திட்டங்கள்..! | Srilankan Visa System New Method Tourist

மேலும், இலங்கையில் முதலிடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முதலீட்டாளர்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசேட விசா திட்டமும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர விசா வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகள் விசா பெற்றுக்கொள்வதினை இலகுவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் இந்த விசா நடைமுறைகள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா திட்டங்கள்..! | Srilankan Visa System New Method Tourist

அத்துடன் வடக்கு மாகாண மக்கள் விசா பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்தும் நோக்கில் பெப்ரவரி மாதம் வவுனியாவில் காரியாலயமொன்று திறக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *