AI தொழில்நுட்பத்தால் ஆபத்து ஆய்வில் தகவல்!

அதிகப்படியான இணையப் பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றால், 2024ல் பெரும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என உலகப் பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் இணையப் பயன்பாடும் அதிகரித்துள்ள நிலையில், சைபர் குற்றங்களும் நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024 இல் ஏஐ தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியான சரிவு, போர் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின் வரிசையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பரப்பப்படும் தவறான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாம் எதிர்கொள்ளாத வகையில் இந்த ஆண்டு தொழில்நுட்பத்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். அடுத்த சகாப்தங்களில் உலக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் போன்றவற்றால் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களை சிறப்பாக பராமரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் சைபர் குற்றங்களுக்கு உள்ளாகி பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக அளவில் இணைய சமத்துவமிண்மை அதிகரித்துள்ளதால், அதை முறையாக நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் WEF அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக எஐ மற்றும் ஜெனரேட்டிவ் AI போன்ற தொழில்நுட்பங்கள் பெரும் அச்சுறுத்தல்களாக மாறும். இதன் வளர்ச்சியால் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேர்தல் செயல்முறைகளில் கூட நேர்மை இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதாரம் காரணமாக, டிஜிட்டல் சாம்ராஜ்யம் பெரும் அளவில் உயர்ந்து வருவதால், இது உலகிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

எனவே 2024 ஆம் ஆண்டில் AI துறையின் வளர்ச்சியால், உலகில் பெரும் ஆபத்துகளும், தாக்கங்களும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *