அரசின் தவறால் மக்களின் வாழ்க்கை சுமை அதிகரிப்பு உதயகுமார் குற்றச்சாட்டு!

 

அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கை, வரி விதிப்பு, பொருட்களின் விலை உயர்வு காரணமாக வாழ்க்கை சுமை அதிகரித்து மக்கள் எதிர்நோக்கும பிரச்சனை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்கள் 11-01-2024 அன்று ஆற்றிய உரை

இந்து சமுத்திரத்தின் முத்து”
“Jewel of the Indian Ocean”
என எல்லோராலும் பெருமையாக அழைக்கப்பட்ட நமது நாடு இன்று தள்ளப்பட்டுள்ள நிலை குறித்தும் – நமது நாட்டு மக்களின் அவல நிலை குறித்தும் முதலில் நான் எனது கவலையை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நமது நாட்டின் இந்த நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்னும் சபையில் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தை மதித்து – நல்லாட்சி நடைபெற்று வந்த நிலையில் அதிகார மோகம் காரணமாக – பல்வேறு பொய்களை கட்டவிழ்த்து விட்டு, சதி திட்டங்களை செயல்படுத்தி – ஏமாற்று நாடகங்களை அரங்கேற்றி ஆட்சியை கவிழ்த்தனர்.

ஆட்சி பீடம் ஏறியவர்கள் – தங்களுடைய வார்த்தைகளை நம்பி வாக்களித்த – மக்களை இறுதியில் நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கும் நாட்டு மக்களை விடிய விடிய வரிசையில் நிற்க வைத்து – வேதனைகளை வழங்கிய அரசாங்கமே இன்றும் ஆட்சியில் உள்ளது.

நாட்டு மக்கள் மத்தியில் இன்று வறுமை தலைவிரித்தாடுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வுத் தகவல்படி நாட்டில் 30,29,300 குடும்பங்கள் கடனாளிகளாக உள்ளனர்.
அதில் 697,300 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கடனாளிகளாக உள்ளனர்.

இதேவேளை, வாங்கிய கடனை மீளச் செலுத்துவதற்காக – ஏறக்குறைய 370,000 குடும்பங்கள் மேலும் கடன் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

அடமான முறையில் 970,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வங்கிகளில் 97,000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 272,250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 303,500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மொத்த சனத்தொகையில் 22.3% வீதமானோர் கடனாளியாகியுள்ள நிலையில் இதில் நகர்புறத்தை சேர்ந்த 24.3% வீதமான குடும்பங்களும் – கிராம்புறத்தில் 20% வீதமான குடும்பங்கள் கடனாளியாகி உள்ள நிலையில் – பெருந்தோட்டப்பகுதியில் 42.3% வீதமான குடும்பங்கள் கடனாளியாகி உள்ளனர். அதாவது, இரட்டுப்பு – இரண்டு மடங்கு

இலங்கையில் 22 மில்லியன் மக்கள் தொகையில் 17% அதாவது 3.7 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 3/2 மக்கள் அதாவது 66% 14 மில்லியன் மக்கள் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கடன் பெறுதல், செமிப்புகளை எடுத்தல், விற்பனை செய்தல் போன்ற பல்வேறு உத்திகளை கடைப்பிடிக்கின்றனர்.

மேலும் 25% வீதமானோர் 5.5 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறப்படுகிறது.

60.5% வீதமான குடும்பங்கள் மாத வருமானத் இழந்துள்ள நிலையில்
91% வீதமானோர்ன் மாத செலவீனம் பாரியளவு அதிகரித்துள்ளது.

தொழிலின்மை குறுகிய காலத்துக்குள் 14.2% வீதமாக உயர்வடைந்துள்ளது.
எனவே, இந்த ஆய்வில் இருந்து நாட்டு மக்களின் உண்மையான நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.

நாடு தான் கடனில் இருக்குறது என்றால, நாட்டு மக்களும கடனில் தான் வாழ்கிறார்கள் அரசாங்கம் கடனுக்கு மேல் கடன் வாங்கி நாட்டு மக்களையும் கடனாளாகியாக்கி உள்ளது.

நாட்டில் மக்கள் வரிசையில் நிற்பதற்கு முடிவு கட்டியதாக ஜனாதிபதி கூறுகின்ற போதிலும் – இன்று வரிசையில் நின்றுகூட எதனையும் வாங்க முடியாத நிலைக்கு மக்களிடம் பணம் இல்லை என்பதே உண்மையான காரணமாகும்.
மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளது

பெற்றோல் டீசல் விலை சுமார் 400 ரூபாவை எட்டியுள்ளது. கேஸ் மீண்டும் 5,000 ரூபாவை எட்டியுள்ளது.

இன்று நாட்டில் மின்வெட்டு இல்லை. ஆனாலும், பல வீடுகள் இருளில் தான்
உள்ளது. காரணம், சுவிட்ச் போடில் கை வைத்து -மின்குமிழை ஒளிரவைக்க மக்கள் அஞ்சுகின்றனர். ஏனென்றால், சோக் அடிக்கும் அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
மொத்த மின் பாவனையாளர்கள் 76,0,3923 இதில் மின் கட்டணம் செலுத்தாத 10,64,400 பாவணையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது
அதாவது 14% வீதமான மின் பாவனையாளர்கள் இருளிலே இருக்கிறார்கள் இருட்டிலே வாழ்கிறார்கள்

அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ள நிலையில
மரக்கறி வகைகளின் விலை இறைச்சி, மீன் விலைகளுடன் போட்டி போடுகிறது.. மரக்கறி வகைகளின் விலைகள் கிலோவுக்கு ஆயிரத்தை கடந்துள்ளன.
முருங்ககாய் விலை 3000 ஐ எட்டியுள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலை இரட்டிப்பாகி உள்ளது.

VAT வரி் அதிகரிப்பின் காரணமாக எரிப்பொருள் மற்றும் சமையல் எரிவாயு அதிகரிப்புடன் மாத செலவீனம் 30% அதிகரிக்கும்.
மக்களின் வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்காத நிலையில் – மக்களிடம் கொள்வனவு சக்தி இல்லாமல் போவதுடன் – போஷாக்கின்மை தலைத்தூக்கும் – வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பல நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்
சிறு மற்றும் நடுத்தர தொழில்த்துறை பல மூடப்பட்டுள்ளன, பல மூடப்படும் தறுவாயில் உள்ளன – நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகித்து
அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு – வெட் வரி அதிகரிப்பு – வருமான வரி அதிகரிப்பு
எரிப்பொருள் விலை அதிகரிப்பு – போக்குவரத்து கட்டணம அதிகரிப்பு
உற்பத்தி செலவு அதிகரிப்பு – தொழிற்சாலைகள் மூடல் – வேலைவாய்ப்பு இழப்பு
இதற்கான தீர்வு என்ன?

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட வெளிநாட்டு கடன்களை எதிர்பார்த்து இருக்காமல் – நாட்டின் தேசிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க முறையான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

இந்தியா,சீனா மற்றும் மலேஷியா போன்ற நாடுகளின் துரித வளர்ச்சிக்கு உள்நாட்டு தேசிய உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சியே காரணம்.
தற்போது வியட்நாம் இந்த பாதையில் முறையான திட்டத்துடன் பயணிக்கிறது.

ஆகவே, நமது நாட்டிலும் உள்நாட்டு தேசிய உற்பத்தியை அதிகரித்து – வரவு செலவுத் திட்ட செலவீனங்களுக்கும் – உள்நாட்டு உற்பத்தி வருமானத்திற்கும் – இடையே ஒரு சமநிலை தன்மையை – ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இல்லையேல், நாட்டை கடன் வலைக்குள் இருந்து ஒருபோதும் மீட்க முடியாது
தற்போது, வெட் வரி அதிகரிப்பின் பின் – பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் – வரி அதிகரிப்பின் ஆழமான தாக்கத்தை – நாட்டு மக்கள் உணர்வர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை முன் வைக்கவில்லை – மாறாக
வரி மேல் வரி விதித்து – மக்கள் மீது சுமை மேல் சுமையை ஏற்றி கஷ்டத்தில் தள்ளியது மட்டுமே அரசாங்கம் செய்துள்ள சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *