புற்றுநோயை கண்டறியும் AI கருவி கண்டுபிடிப்பு!

 

புற்றுநோய் பாதிப்பை துல்லியமாக கண்டறியும் AI கருவியை பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நவீன மருத்துவ முறையின் மிக முக்கிய கண்டுபிடிப்பை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் செல்லின் பாதிப்புகளை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தை கண்டறிந்திருக்கின்றனர். இந்த AI கருவிக்கு I Star என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஏஐ கருவியானது புற்றுநோய் செல்லினுடைய தாக்கம், வீரியம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட உதவுகிறது. மேலும் பாதிப்பின் அளவு, தேவைப்படும் சிகிச்சை முறை ஆகியவற்றையும் துல்லியமாக கணக்கீடு செய்ய உதவுகிறது. இது மட்டுமல்லாமல் மார்பகம், புரோஸ்டேட், சிறுநீரகம், பெருங்குடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை இக்கருவி சோதனை முறையில் மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு இருக்கிறது.

மரபணுவில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றம், நோயின் வீரியம், அளிக்க வேண்டிய மருந்து ஆகியவற்றையும் சிறப்பாக கண்டறிகிறது. இது மட்டுமல்லாமல் இக்கருவியில் உள்ள இமேஜிங் தொழில்நுட்பம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல்லை மருத்துவர் பார்க்க உதவுகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது துல்லிய தன்மையையும் இக்கருவி மருத்துவருக்கு காட்டும் தன்மை கொண்டது.

மூன்றாம் நிலை லிம்பாய்டு கட்டமைப்பின் போது நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியவும், ஊக்குவிக்கவும் இக்கருவி பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்று நோய்க்கு ஆகும் சிகிச்சை காலம் இந்த கருவினால் பெருமளவில் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ ஸ்டார் வருகை புற்றுநோய் சிகிச்சையில் மாபெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *