ஐ.பி.எல் போட்டிகளில் ஹார்த்திக் பாண்டியா விளையாட மாட்டார்

கணுக்கால் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் மும்பை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக குஜராத் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஹார்த்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார்.

பின்னர் மும்பை அணிக்கு அவர் வர்த்தகம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேயில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷூக்கு எதிரான ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் ஹர்திக் போட்டிகளில் இருந்து விலகினார்.

ஹார்த்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியதும் தலைவர் பதவியில் இருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டு, பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டார்.

2022ஆம் ஆண்டுக்கு முன்னர் பாண்டியா மும்பை அணிக்காக ஏழு ஐ.பி.எல் தொடர்களில் விளையாடினார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த பிறகு அந்த அணியை சிறப்பாக வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஐ.பி.எல் தொடரில் பாண்டியா விளையாடாத பட்சத்தில் மும்பை அணியின் தலைவராக யார் செயற்படுவார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *