முதல் சந்திப்பிலேயே மனதை பறிகொடுத்த பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் முத்தையா முரளிதரன். இவர் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

முரளிதரனுக்கும் சென்னையை சேர்ந்த Malar group of hospitalsன் நிறுவனர் மருத்துவர் ராமமூர்த்தி – மருத்துவர் நித்யாவின் மகள் மதிமலருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

முரளிதரன் – மதிமலர் காதல் கதை

இவர்களின் காதலுக்கு தொடக்க புள்ளியாக இருந்தது பிரபல தமிழ் திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் தான். சந்திரசேகர் சென்னையில் உள்ள சன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு ஒருமுறை சென்ற போது அங்கு பேட்டி கொடுப்பதறாக முரளிதரன் வந்திருக்கிறார்.

அப்போது இருவரும் பேசி நட்பானார்கள். இவர்களின் தொடர்பு நீடித்த நிலையில் முரளிதரன் தாயார் லட்சுமியை சந்திரசேகர் சந்தித்திருக்கிறார். அப்போது தனது மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து கொண்டிருப்பதாக லட்சுமி கூற 24 வயதான மதிமலரை சிறுவயதிலிருந்தே அறிந்த சந்திரசேகர் அவர் குறித்து லட்சுமியிடம் பேசினார்.

மதிமலருக்கும் அவர் வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் என சந்திரசேகர் சொன்னார். பின்னர் முரளிதரனிடம் அவர் தாயார் லட்சுமி மதிமலர் குறித்து சொல்ல முதலில் அவர் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை.

கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த விரும்பினார். பின்னர் சமாதானங்களுக்கு பிறகு மதிமலரைச் சந்திக்க முரளிதரன் முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 2004 நவம்பர் மாதம் இலங்கையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த முரளிதரன் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டதாரியான மதிமலரை சந்தித்தார்.

முதல் சந்திப்பிலேயே மதிமலரால் முரளிதரன் கிளீன் பவுல்டு ஆனார் என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் முரளிதரனின் பணிவு மதிமலரை ஈர்த்தது. இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்க தொடங்கினர்.

அந்த ஒரு மணி நேரத்தில் முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும், மதிமலர் தனது பொழுதுபோக்கு பற்றியும் பேசினார்கள். பின்னர் உடனடியாக முரளிதரன் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை மதிமலரிடம் கொடுத்தார்.

இதன்பிறகு சென்னையில் 2005ஆம் ஆண்டு தமிழ் பாரம்பரிய முறையில் முரளிதரன் – மதிமலர் திருமணம் நடைபெற்றது. மதிமலர் சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் அசத்தலாக காட்சியளித்தார். மணமகனான முரளிதரன் பட்டுவேட்டி, சட்டையில் பிரமாதமாக இருந்தார்.

இவர்கள் திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *