இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: இதுவரையில் 2 ஆயிரத்து 163 பேர் உயிரிழப்பு

2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளது என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

இந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,206 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஊனமுற்றோர்.

டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகி வருகின்றது.

இந்த விபத்துகள் இடம்பெறுவதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை என தொியவந்துள்ளது.

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்” என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *